Monday, April 20, 2015

மாணவர்கள் கற்கிறார்கள்..

வணக்கம் தோழர்களே மாணவர்களே..,

எமது சித்த மருத்துவ கற்பித்தல் இனிதே நடைபெருகிறது., மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கின்றனர். முதல் கட்ட பாடநெறி முடிவடைந்த நிலையில் இருக்கிறார்கள்..சுமார் மூன்று மாதகாலம் கொண்ட பாடநெறியானது (கல்லூரிகளில்) எமது மாணவர்களின் புரிதல் வேகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளதாலும் விரைவாக முடிவடைந்திருக்கிறது., எழுத்து மூலமான விடயங்கள் அதன் விளக்கங்கள் தெளிவடைய கூறப்பட்டிருக்கிறது. அதனை முறையாக மாணவர்கள் அறிவில் சேர்த்துவிட்டால் சித்த மருத்துவம் மட்டும் அல்ல, ஏனைய மருத்துவ முறைமைகளையும் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

அவர்களுக்கு செயற்த்திட்ட வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, குழிக்கல் வாங்குதல், அதை சுத்தி செய்யுதல், திரிகடுகு திரிபலாதி குளிகை செய்தல் அதற்காக அவற்றை பொதுவியல் முறையில் சுத்தி செய்தல், காடி நீர் தயாரித்தல் போன்றவைகள் முதல் கட்ட பாடநெறியில் சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டிருக்கிறது.,

மருத்துவங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் சித்த மருத்துவமே இன்றைய அனைத்து மருத்துவ முறைக்கும் ஆதாரமானது என்பதற்கான சான்றுகள், மற்றும் சித்த மருத்துவம் என்பது 10000 வருடம் பழமையானது அல்ல அது 10000 வருடம் முன்னோக்கி இருக்கும் நவீன உயர் விஞ்ஞான மருத்துவம் என்பதற்கான ஆய்வுகள், சான்றுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது., சித்தர்கள் என்ற பேரில் இருக்கும் வேறுபாடுகள் மற்றும் அதன் உண்மை நிலை என்பன ஆய்வுகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

இவை மிக தெளிவாக கற்றிரிக்கிறார்கள் எமது மருத்துவ மாணவர்கள் என நினைக்கிறேன்., அவர்கள் கருத்துக்களை எந்த தயக்கமும் இன்றி இங்கு பதிவார்கள் என நினைக்கிறேன்.

பாடநெறியின் காலத்தை நாம் கருத்தில் எடுப்பதில்லை என்ற நிலையில் இருக்கிறோம், காரணம் இன்று இங்கு கற்பவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல, தினசரி வாழ்விற்கான ஓட்டத்தில் இருக்கும் மனிதர்கள், அவர்கள் விரைவாக கற்றால் தான் அவர்கள் தங்கள் நிலையை உயர்த்த முடியும் என்ற நிலை இருப்பதால் வேகமாகவும் முடிந்தவரை தெளிவாகமும் இந்த கற்றல் தொடரும்.

மாணவர்கள் தனியாக இயங்காமல் உங்களுக்குள் ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தி நேரத்தை சற்று இதற்காக செலவு செய்தால் நீங்கள் மிக வேகமாக எம்முடம் சேர்ந்து பயனிக்க முடியும்.

குறிப்பு., சில மாணவர்கள் வகுப்புக்களை தவறவிட்டிருந்தால், அதை மற்ற மாணவர்களிடம் கேட்டு தெளிவடையுங்கள்., அப்படியே இனி வரும் வகுப்புக்களுக்கு தவறாமல் வாருங்கள்.
நீங்கள் எப்போது வருவீர்கள் என்று நாம் காத்திருக்க முடியாது, தனித்தனியே உங்களுக்கு பதிவுகள் எழுதவும் அழைக்கவும் முடியாது., முடிந்தவரை எமது முகநூலை படித்து தகவல் தெரிந்து செயற்படுங்கள்..,

முதல் பாடநெறி முடிந்து விட்டது நாம் எப்படி இதில் இணைவது என்ற தயக்கம் வேண்டாம் நீங்கள் தாறாலமாக இணையலாம், உங்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு கற்றல் ஆரம்பமாகும்.

எமது வேலைப்பழுவுக்கு இடையில் நாம் மாணவர்களுக்கான கற்பித்தலையும் தயார் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் சில சமயங்களில் பதிவுகள் தாமதமாகலாம்.

வாசி யோகம் என்ற பேரில் மூச்சை அடக்கி பயிற்சி செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தற்போது மாணவர்களுக்கு தெளிவாக தெரியும், சித்தர்கள் மருத்துவத்தையும் தந்திருக்கிறார்கள், யோகத்தையும் தந்திருக்கிறார்கள் இரண்டிலும் இருக்கும் உண்மையை தெளிவாக கற்றால் மட்டுமே உண்மை புலப்படும் என்பது முதல் கட்ட வகுப்புக்கள் மூலம் தெளிவாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.,.

மாணவ மணிகளே.. உங்கள் சிந்தனையில் அறிவின் தெளிவை தயக்கமின்றி பதியுங்கள் இங்கு.., இந்த பாடநெறி உங்களுக்கு எப்படியாக அறிவு மாற்றத்தை தந்திருக்கிறது மற்றும் உங்கள் நிலை எப்படி இருக்கிறது என்று எழுதுங்கள் உங்கள் நண்பர்கள் உங்களை பார்த்து தெளிவடையட்டும்.

” கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே..”

” அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே...”

எமது மாணவர்கள் சிலரின் செயற்திட்டம் இங்கு காணலாம்..




















சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Thursday, April 16, 2015

உடல் கொழுப்பு பயம் இல்லை..

வணக்கம் தோழர்களே..,

எமது ஆய்வில் நீண்ட நாளாக இருந்த விடயம் ஒன்று இன்று காலையில் முடிவுக்கு வந்திருக்கிறது., உடல் கொழுப்பை குறைத்து தொந்தியை சுருக்கி ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி செய்யக் கூடிய நிலையில் இதை நீண்ட நாள் ஆய்வில் தயார் செய்திருக்கிறேன். உடல் செமிபாட்டுத் தொகுதியை சீர் செய்து உடலில் ஏற்படும் தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தி சுவாசத்தையும் சீர் செய்க்கூடிய வகையில் இந்த கடுமையான நாத நீர் (திராவகமாக) தயாரிக்கப்பட்டிருக்கிறது.


இதை சுத்தி செய்த நீருடன் 50 மி.லீ.. நீரில் 3 துளி என்ற அளவில் சேர்த்து தினம் இரண்டு வேலை சாப்பிட்டால் சுமார் 15 நாளில் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் உணரமுடியும். கடுமையாக உடல் எடை இருப்பவர்கள் இதை உணர சற்று காலதாமதமாகும், அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப இதன் வேகத்தை அதிகரித்து கொடுத்தால் விரைவாக உடல் மாற்றம் பார்க்கலாம்.

உடல் பருமனுக்கான மருந்து இது அல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள், இது உடல் கொழுப்பை கட்டுப்படுத்த பயன்படுவது, உடல் பருமனுக்கு கொழுப்பு மட்டும் காரணம் அல்ல. இதனுடன் சில இன்னும் சில ஆய்வுகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன், அது பெண்களுக்கு ஏற்படும் தொந்தியை கரைக்க (குழந்தை பெற்ற) உதவியாக இருக்கும்.

http://siththarvaakadam.org/?p=821


சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Monday, April 13, 2015

மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்...

வணக்கம் மாணவர்களே /  தோழர்களே..

நீண்ட நாட்களாக எந்த மந்திரப்பதிவும் வரவில்லை என்ற ஏக்கம் எமது மந்திரங்களை எதிர்பார்கும் வாசகர்களுக்கு இருக்கிறது.. அதன் வெளிப்பாடாக நாம் ஓர் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம் என இருக்கிறோம்..

அதாவது சாத்வீக தன்மை கொண்ட இயந்திர மந்திர உபாசனைகள் செய்து தரலாம் என நினைக்கிறேன்.. உதாரணமாக கூறினால் உங்கள் வீடுகளில் தொழில் சாலைகளில், வியாபார தளங்களில் இருக்கும் குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சில வழிபாடுகள்..



1. மகாலட்சுமி இயந்திரமும் அதன் பூசை முறையும்
வீடுகளில் பெண்களால் செய்யப்பட வேண்டிய பூசை முறை.

2. சுப்ரமணியர் மாத்ருக இயந்திரம்
தொழில் நிலையத்தில் ஏற்படும் தடைகள் நீங்க செய்யவேண்டியவை.

3. பால சண்முக மகா இயந்திரம்
குழந்தை பாக்கியம் என்ற சொல்லுக்கு இதுவே ஆதாரமக கூறப்படுகிறது. பெண்களால் செய்யும் வீட்டு வழிபாடு.

4. ஸ்ரீ சுப்ரமணியர் மகா இயந்திரம்
முருகப்பெருமானின் அருளை பெற்று ஞான மேட்சத்தை அடைய இது., ஆண் பெண் என எவரும் இதை பூஜிக்கலாம். அவ்வையார் இந்த பூசை செய்ததாக எமது குரு வம்சத்தினர் கூறுவதுண்டு.

5. பிரம்ம இயந்திரம்..
கன்ம வினையால் நாம் இங்கு பிறந்திருக்கிறோம், அதில் இருந்து விடுபட்டு மேலும் இப்பிறவியில் நாம் செய்த வினைகளை நீங்கி இனியும் பிறப்பு வேண்டாம் என்று வழிபடும் பூசை முறை..

6. ஸ்ரீ விஷ்னு மகா லட்சுமி இயந்திரம்
இது ஆண்களால் தொழில் சாலைகள் வியாபார இடங்களில் கண்டிப்பாக செய்ய வேண்டிய வழிபாடு..

7. மகிடாசூர மர்த்தனி இயந்திரம்
தொடர்சியான எதிரிகள் தொல்லையில் இருந்து வெளிவர, வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகள் மூலம் ஏற்படும் மனகசப்புக்கள் விலக இதை ஆண்கள் பெண்கள் என யாரும் செய்யமுடியும்.

8. நந்திகேஸ்வரர் மகா இயந்திரம்
இது ஓர் அற்புதமான இயந்திரம் சிவபூசைகள் செய்து வழிபடுபவர்கள் இந்த இயந்திரத்தை பூசித்தால் சிவனை மிக இலகுவாக நெருங்க முடியும். இவர் ஞான நெறியை பேதிப்பவர்.

9. கணேசர் ஸ்ரீ லட்சுமி மகா இயந்திரம்
இதுவும் வீடுகளில் செய்ய வேண்டிய பூசைமுறைகளில் ஒன்று. வீட்டு வாசல் படியில் இருந்து வீட்டை உள் நோக்கி இந்த இயந்திரத்தை வைக்க வேண்டும். இதன்மூலம் இரணிய காலத்தில் (மாலை 5.30 - 6.30) வரையில் மகாலட்சுமி இந்த இயந்திரம் இருக்கும் வாசல்களில் வந்து ஆசி செய்வால் என்பது இரணிய சகதம் எனற வடநூலில் கூறப்படுகிறதாக கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..

10. ஸ்ரீ வக்ரதுண்டர் மகா இயந்திரம்
இது மிக அற்புதமான இயந்திர மந்திர பூசை, வீட்டில் குடும்பங்களில் உறவுகளில் ஏற்படும் மனக்கசப்புக்களை நீக்கி, இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய மிக சிறந்த வழிபாடாக அமையும்.

இங்கு நாம் பதிவிட்டிருப்பவை வேத ஆகம உபநிடதங்கள் சாந்த அடிப்படியில் உருவாக்கப்பட்ட இயந்திர மந்திர பூசை முறைகள்.., இவை நீண்ட காலமாக நாம் உபயோகிக்கிறோம், எமக்கு அல்ல பிரச்சனை என்று வருபவர்களுக்கு.. நல்ல பலனும் கிடைக்கிறது..
விஷேடமாக ஹோமம் செய்து அதில் இந்த இயந்திரங்களை ஆவாகணம் செய்து வேண்டுமானாலும் தரமுடியும்.

குறித்த நபரின் புகைப்படத்துடன் எம்மை தொடர்பு கொண்டால் உங்கள் தேவைக்கு ஏற்ற இயந்திரமும் அதன் பூஜை முறையும் செய்து தரப்படும். இதனுடன் சகல காரிய சித்தி தரும் திலர்த்தம் சேர்த்து வேண்டுமானால் நிங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் வெளிப்படையாக இந்த முறைகளை பதிவிடலாம் என நினைத்தோம் ஆனால் எமது பிலாக்கில் இருந்த மந்திரங்கள் விற்பனையானதை அவதானித்தபின்னர் இதை பதிவிடக்கூடாது என்ற திடமான முடிவுக்கு வந்துவிட்டோம்.

உங்களுக்கு இங்கு காட்டப்படும் விடயங்கள் தெரிந்திருக்கும், மருந்துகளானாலும் சரி இரசவாதம் ஆனாலும் சரி மந்திரமானாலும் சரி, அவற்றை ஆதாரங்களுடன் பதிவதே எமது பனியாக இருக்கும்.
நம்பிக்கை இருப்பவர்கள், தேவை இருப்பவர்கள், எமது மின்னஞ்சல் முகவரிக்கு தெளிவாக எழுதி அனுப்புங்கள்..

muthaly@gmail.com அல்லது  siththarvaakadam@gmail.com
என்ற இரண்டு மின்னஞ்சலுக்கும் உங்கள் தகவல் அனுப்பலாம்.
எமது இணையம் siththarvaakadam.org

உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் அது உங்களை வந்தடையும். இருக்கும் இடத்துக்கு ஏற்ப அதன் கட்டணம் அமையும்.

நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்

Sunday, April 5, 2015

சித்த மருத்துவ வகுப்புக்கள் ஆரம்பம்,

வணக்கம் மாணவர்களே,

நேற்றய வகுப்பு இனிதே நாடிகள் பற்றிய விளக்கத்துடன் நடைபெற்றது., இணையத்தில் சில கோளாறுகள் காரணமாக தடைகள் இருப்பினும் கற்றல் சிறப்பாக நடைபெறுகிறது என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன..!

அப்படியே நாம் கூறிய கல், இதுவே.., தவறாமல் மாணவர்கள் அணைவரும் இதைப் போன்று ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.,



மேலும் சிலர் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை., இதற்கு மேல் எம்மால் இதைப்பற்றி கருத்துக்கள் விளக்கங்கள் தரமுடியாது.




புதிய மாணவர்கள் சேர விரும்பினால்.. muthaly@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலா.

தேவையிருப்பின் நீங்கள் மின்னஞ்சல் செய்து எம்மை தொடர்புகொள்ளுங்கள்..

சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்