திரு மூல நாயனார் அல்லது சித்தர் பெருமக்களில் ஒருவரான திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியிருக்கும் பல மாந்திரீக உபாசனைகளில் ஒன்றான் யகார மையச்சக்கரம் மிக சக்திவாய்ந்த மந்திர உபாசனைகளை கொண்டது.
திருமந்திரம் 3000 என்ற பாடற்தொகுதியில் அனேக தெய்வ உபாசனைகளையும் பல யந்திர தந்திர அஷ்டகர்ம முறைகளையும் விரிவாகவும் அதே நேரத்தில் கடுமையான பரிபாசையாகவும் கூறியிருக்கிறார்.
திருமந்திரத்தில் பஞ்சாட்சர விளக்கம் மனோன்மணி சக்கரம் வைரவர் எண்கோணம் தொடக்கம் அனேக விளக்கங்கள் தரப்பட்ட நிலையில் இந்த யகார மையச் சக்கரம் ஓர் அபூர்வ வகை யந்திரமாக கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் எப்படி பிரசித்தமோ அதை விட அதிக சக்திவாய்ந்த யந்திரமாக சித்தர்களால் மறைக்கப்பட்ட ஓர் யந்திரம் இது.
” யகார மையம் ” என்றால் என்ன என்ற கேள்வி நீங்கள் கேட்பது புரிகிறது....
” சிவயநம ” எனும் பஞ்சாச்சரத்தின் நடுவில் இருப்பது எதுவோ அதுவே யகாரம் அதுவே மையம்..
இந்த “ ய “ ஏன் நடுவில் உள்ளது என்று சிந்தித்த மத, மாந்திரீக, ஆன்மீக சமய வாதிகள் எத்தனைபேரோ எமக்கு தெரியாது.. அதை போல் சி முதல் ம வரை என்ன இருக்கிறது என்ற எமது ஆய்வின் போது கிடைத்த பல இரகசியங்கள் வியப்பையே தந்திருக்கிறது.

சி என்றால் இது வ என்றால் இது என என்று இன்று கிடைக்கும் புத்தகங்களி கிடைக்கும் விளக்கம் எதுவும் நியமல்ல என்பது எமது தெளிவு.. அதற்கு எடுத்துக்காட்டாக சுமார் 12 வருடங்களுக்கு முன் நாம் ஆய்வு செய்த அதாவது வரந்த (வரைய முட்பட்ட) திரு மூலரின் யகாரமைய சக்கரம் இது. வரைந்த பின்னர் அதை உருதிப்படுத்த சில சில ஆய்வாலரின் கட்டுரைகளையும், திருவாடுதுறை ஆதீனத்தின் சில குறிப்புக்களையும் ஒப்பிட்டு பார்த்து உருதிசெய்தோம்.
அதையும் தாண்டி அதன் உபாசனைகளை செய்த போது அதன் உண்மையும் ஏன் சித்தர்கள் இதை மறைத்தனர் என்ற தெளிவும் எமக்கு கிடைத்தது..
முக்தியை நோக்கிய பயனத்துக்கும் அஷ்ட யோகம் எனும் நிலைக்கும் ஆரம்ப படிக்கட்டே இது என புரிந்தது, ஆனால் நமது வயதும் செயலும் இதற்கு ஏற்றது இல்லை என்ற மிக தெளிவான நிலை நம்மிடன் இருந்த காரணத்தால் குறிப்பிட்ட உபாசனையுடன் நிருத்திக்கொண்டோம்.
நாம் அப்போது ஆராய்ந்த சில விடயங்களை நேற்று மாலையில் தேடும் போது இந்த சில ஆய்வுகளின் பக்கங்கள் கிடைத்தது அதை வாசகர்களுக்கு பதிவிடலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது..
இதை சரியான முறையில் உபாசனை செய்தால் தன்னை மறந்த நிலையும் இறைவனின் அருவ நிலையும் தெளிவாக புரியும். ஆனால் இதை எப்படி உபாசனை செய்வது என்ற தகவல் இங்கு பதிவிடவில்லை, காரணம் முன்னமே நாம் கூறியது போல உருதியான மன கட்டுப்பாடு இல்லா விட்டால் இது உங்களை அழைத்து செல்லும் பாதை மிக ஆபத்தாகிவிடும்.
முறிப்பிட்ட மன பக்குவமும் வாழ்கையின் கடமைகளை செய்து முடித்தவர்களுக்கும் மட்டுமே இது உகந்த உபாசனையாக இருக்கும் என்பது எமது கருத்தும் ஆய்வின் முடிவுமாக உள்ளது...
இதை பற்றிய உபாசனைகளை முறையாக செய்ய வேண்டுமாயின் அதை பற்றி கற்பிக்க தயாராக இருகிறோம் ஆனால் யாருக்கு என்பது இறைவனின் சித்தம். வாழ்கையின் கடமைகளை செய்து முடித்த தோழர்கள் ஆன்மீக பாதையின் உண்மையை உணர விரும்பின் எம்மை தொடர்பு கொள்ளவும்.
இது மிக கடினமான பாதை என்பதை மனதில் வைத்து பின்னர் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு வேலை இது உங்களுக்கு தெரிந்த விடயமாக இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்..
நன்றி
சிவஸ்ரீ மா கோ முதலியார்
சித்த மருத்துவர்