ஒவ்வொறு மாந்திரீகருக்கும் வைத்தியருக்கும் அவர் தம் இஷ்ட தேவதை இருக்கும். அதை வழிபட்டே அவரவர் காரியங்களை செய்வர்.
வாலாயம் என்பது ஒரு தேவதையை நம் வசப்படுத்தி அதன் மூலம் நமது காரியங்களை (மாந்திரீக வைத்திய) சித்தி அடயச்செய்வதுவேயாகும். (நன்மை செய்யின் நன்மை கிடைக்கும்)
ஒவ்வொரு சக்திக்கும் தனிப்பிரயோக மந்திரமும் தந்திரமும் உண்டு அதனை குறிப்பிட்ட கால அளவு முறைப்படி செய்துமுடிப்பின் அதன் பலனை அடையமுடியும். வாலை ஒன்றோ அல்லது பலவோ தேவைக்கேற்ப இருக்கலாம்.
ஒரு வாலை சக்க்தியை தெரிவு செய்யும் போது நமது உடல், உள்ளம், இராசிச் சக்கரம், பட்ச்சி, நாம் இருக்கும் சூழல் அனைத்திலும் கவனம் செலுத்தவேண்டும், அத்தோடு குருவிடம் ஆசி பெற்று அதை தேர்ந்தெடுக்கவேண்டும்.
இங்கு ஒரு வாலை மந்திரமும் முறையும் தந்துள்ளேன், பிறதேவதைகளின் வாலாயம் தேவைப்படின் தயக்கமின்றி என்னிடம் கேட்கலாம்.
உங்களுக்கு என்று ஓர் தனி இடம் தேவை அது குடிசையாகவோ அல்லது வீடாகவோ இருக்கலாம் அனால் அங்கு உங்களை தவிர யாரும் இருக்ககூடாது. அப்படி தயார் செய்த இடத்தை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். நகர்புரம் அற்று ஓர் அமைதியான சூழலை தெரிவுசெய்து கொள்ளுங்கள். குடிசையாக இருப்பின் மிக நன்று. அங்கு வாசனைத்திரவியங்களின் வாடைகளும், நறும் மலர்களும், ஊதுபத்தி வாசமும் நிறைந்திருக்க வேண்டும்.
முத்துமாரி அம்மன் வாலை
ஓம் ஆதிமாரி ஆனந்தமாரி முக்கோணத்தில் முந்தியிருந்து முப்புரத்தை தகணம் செய்தவளே ஈசரிடத்தில் இடப்பாகம் பிரியாதவளே அடியேன் நினைத்த இடத்தில் வந்து வாக்கருலுவேன் என்று வரம் தந்த உக்கிரகால சிதம்பர பஞ்சாட்சர சக்தி அகாரம் வா உகாரம் வா மகாரம் வா ஆதி சக்தி ஆணை என்முன் வா வா சுவாகா.
கிரிகை.
பூரணை தினத்தில் அதிகாலையில் கடமைகளை முடித்து விட்டு சுத்தமான ஓர் இடத்தில் கிழக்கு முகமாக மஞ்சள் துணியை நிலத்தில் விரித்து அதன்மேல் தலைவாழை இலை போட்டு அதன்மேல் வெள்ளை பச்சை அரிசி ஒரு படி கொட்டி ஒரு சான் விட்டம் வரக்கூடிய வட்டமாக பரவி அதன்மேல் மஞ்சள்தூல் கலந்த நீர் சற்று தெளித்து பின் அதன்மேல் சிறிய பூரணகும்பம் வைத்து (மாவிலை கும்பம்) அதற்கு சிகப்பு பட்டு சாத்தி, செந்தாமரை மலர் வைத்து அலங்கரிக்கவும், கும்பத்தின் வலது பக்கத்தில் வாழையிலையில் மஞ்சளாள் வினாயகர் செய்து அருகம்புல் குத்தி மலர் வைத்து அலங்கரிக்கவும், இடது பக்கம் குருவை மனதில் நினைத்துக்கோண்டு ஒரு தாமரை மலர் வைக்கவும். படயலாக சக்கரை அமுது செய்து படைத்து பழங்கள் வைத்து தூப தீபம் காட்டி மனதை ஒருனிலைப்படுத்தி கும்பத்தின் முன்பாக சிகப்பு பட்டு விரித்து அதன்மேல் தியான முறையில் அமர்ந்து மந்திரத்தை 108 உருக்கொடுக்கவும் இப்படி காலை மாலை படயலை மட்டும் மாற்றி அடுத்துவரும் அமாவாசை வரை செய்யவும். படயல் மட்டுமே உங்கள் உணவு. அமாவாசை இரவு 1008 உரு ஜெபித்து பூஜை முடிந்ததும் அவ்விடத்தில் உறங்கவும். பூஜையின் பலன் அன்று இரவு உங்களுக்கு தெரியும்.
வாலை இயந்திரம்.
செப்பு தகட்டில் இதை வரைந்து பன்னீரால் கழுவி கும்பத்துள் போட்டு கும்பம் வைக்கவும். பூஜைகள் முடிந்தபின் இதை கூட்டில் போட்டு இடுப்பில் கட்டிக்கொள்ள நீங்கள் எங்கு சென்றாளும் இது உங்களை காப்பற்றி வெற்றிதரும்.
குறிப்பு.
இந்த காலங்களில் மது, மாது, மாமிசம் உன்பதையும் வெளியிட பிரயாணங்களையும் தவிர்க்கவும். நீங்களே உணவு சமைத்து உண்பது மிக அவசியம்.
உடலையும் உணர்வையும் கட்டுப்படுத்த முடியாதவருக்கு எதுவும் கைகூடாது.
நன்றி